திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (09:52 IST)

கம்பீர் & கோலி இருவருக்கும் 100 சதவீத அபராதம்!

கோலியும், கம்பீரும் 2014 ஆம் ஆண்டு இதே போல ஐபிஎல் தொடரில் மோதிக் கொண்ட சம்பவம் ஐபிஎல் வரலாற்றின் கருப்புப் புள்ளிகளில் ஒன்றாக இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றியிருந்த வீரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினர்.

லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி சம்பளம் முழுவதும் அபராதமாக பிசிசிஐ –ஆல் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் கோலி மெதுவான பந்துவீச்சுக்காக அபராதம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.