தொடர்புடைய செய்திகள்
- தங்க சுரங்கத்தில் திருட முயன்ற 3 பேர் பலி- சடலத்தைத் தேடும் பணி!
- பிரதமர் பேசுனதுக்கும், நிதியமைச்சர் அறிவிப்பிற்கும் சம்பந்தமே இல்லை! – மு.க.ஸ்டாலின்!
- ’இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ எல்லாம் வெறும் கற்பனைதான்: கோலிவுட் பிரபலத்தின் கருத்து
- மீதி 16.4 லட்சம் கோடி எங்கே? நிதியமைச்சருக்கு ப சிதம்பரம் கேள்வி!
- சென்னை டூ டெல்லி சிறப்பு ரயில்: ஆரோக்ய சேது இல்லைனா அனுமதி இல்ல!
78 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – மாநிலங்களில் நிலவரம்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,003 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 975 பேர் பலியான நிலையில் 5,547 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 9,627 ,பேரும், டெல்லியில் 7,998 பேரும், ராஜஸ்தானில் 4,328 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,173 பேரும், தமிழகத்தில் 9,227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
