செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (09:02 IST)

தங்க சுரங்கத்தில் திருட முயன்ற 3 பேர் பலி- சடலத்தைத் தேடும் பணி!

கோப்புப் படம்

கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட முயன்ற 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள கோலார் தங்க சுரங்கத்தின் 1000 அடிக்கும் கீழே சென்று தங்கத்தைத் திருட 3 பேர் கொண்ட கும்பல் முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் மயங்கி விழுந்து பலியாகியுள்ளனர்.

அதில் இரண்டு பேரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சடலத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மூன்று பேரும் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.