’இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ எல்லாம் வெறும் கற்பனைதான்: கோலிவுட் பிரபலத்தின் கருத்து

indian 2
’இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ எல்லாம் வெறும் கற்பனைதான்
Last Modified வியாழன், 14 மே 2020 (08:33 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிற்கு முன்னரே இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுவரை ’இந்தியன் 2’ படப்பிடிப்பு எடுத்த காட்சிகளைத் தொகுத்து பார்த்ததில் சுமார் 6 மணி நேர காட்சிகள் இருப்பதாகவும் இதனை அடுத்து ’இந்தியன் 2’ மட்டுமன்றி ’இந்தியன் 3’ படமும் வெளியாகும் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்

ஆனால் கோலிவுட் பிரமுகர் ஒருவர் இது குறித்து கூறுகையில் ’இந்தியன் 2’ படம் ரிலீஸ் ஆனால் அது உலக அதிசயங்களில் ஒன்று என்றும் அந்த அளவுக்கு அந்த படத்தில் பிரச்சனை இருக்கிறது என்றும் எனவே ’இந்தியன் 3’ படம் வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்

’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் லைக்கா மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் அறிக்கை போர் நடத்தியது அனைவரும் தெரிந்ததே. அதேபோல் இருவருக்கும் இடையே சம்பள பிரச்சனை உச்சத்தில் உள்ளது. எனவே ’இந்தியன் 2’ படமே முடியுமா என்பது கேள்விக்குறி என்றும் இந்தியன் 3 படமெல்லாம் சான்ஸே இல்லை என்றும் அந்த பிரமுகர் கூறியுள்ளார்

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது ’இந்தியன் 2’ கண்டிப்பாக வெளிவரும் என்றும் இந்தியன் 3 சூழ்நிலையைப் பொருத்து நடக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்இதில் மேலும் படிக்கவும் :