1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis in India increases

அதிகரித்த தினசரி பாதிப்பு - இந்தியாவில் கொரோனா!

கொரோனா
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,58,371 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 94 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,252 ஆக உயர்ந்துள்ளது.
 
அதோடு, தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,087 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,05,61,608 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்