1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus cases increase rapidly in India

அதிவேகமாக பரவும் கொரோனா? இந்திய பாதிப்பு நிலவரம்!

கொரோனா
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.  
 
ஆனால் கடந்த சில நாட்களாக 20,000-த்திற்கு குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 23,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 117 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,306ஆக உயர்ந்தது. அதோடு கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உயர்ந்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டம்! – பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயக்கம்!