இதுதான் எனது கடைசி போட்டி – மேரி கோம் அறிவிப்பு!
டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் தொடரே தனது கடைசி ஒலிம்பிக் தொடர் என மேரிகோம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் இதுதான் தனது கடைசி ஒலிம்பிக் தொடர் என அறிவித்துள்ளார்.தற்போது அவருக்கு 38 வயது ஆகிறது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அதிகபட்ச வயது 40 என்பதால் அடுத்த ஒலிம்பிக்கில் அவரே கலந்துகொள்ள நினைத்தாலும் அனுமதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.