தொடர்புடைய செய்திகள்
- கிராமசபை கூட்டங்களை சீக்கிரம் நடத்துங்க! – மநீம கமல்ஹாசன் மனு!
- நயன்தாரா இயக்குனர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!
- இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி… விறுவிறுவென நடக்கும் வேலை!
- மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
- 40 ஆயிரமாக தொடரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3வது அலைக்கு சாத்தியங்கள்
ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கொரோனா 3வது அலையை கணித்துள்ளனர்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனிடையே கொரோனா மூன்றாவது அலை குறித்த பீதியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் ஐ.ஐ.டி.யின் மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.யின் மனிந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை கணித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு....
ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன, அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும். கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது 3-வது அலை உருவாகலாம்.
