தொடர்புடைய செய்திகள்
- இன்று ஆடிக்கிருத்திகை: பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை!
- 19.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 2000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
- கடந்த 1980ல் இருந்து இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள் எத்தனை?
- அதிகரிக்கும் கொரோனா; ஆபத்தில் 46 மாவட்டங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை!
40 ஆயிரமாக தொடரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,16,95,958 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,13,718 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
