வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:29 IST)

கிராமசபை கூட்டங்களை சீக்கிரம் நடத்துங்க! – மநீம கமல்ஹாசன் மனு!

கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கிராமசபை கூட்டம் நடத்தக்கோரி கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம அலை குறைந்திருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகஸ்டு 15க்குள் கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.