தொடர்புடைய செய்திகள்
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
- இந்தியாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர்! – விசாவை நீட்டித்த மத்திய அரசு!
- இங்கிலாந்து விக்கெட்டுக்களும் மளமளவென சரிவு: ஸ்கோர் விபரம்
- 21.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு
தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,29,03,289 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,99,778 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
