திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (09:24 IST)

தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு தலைமை மருத்துவமனைகள் பலவற்றில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரையில் உள்ள வியாபாரிகள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், 100 பேருக்கும் அதிகமாக தடுப்பூசி போட வேண்டிய நிறுவனங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.