1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases little bit increased in India

மீண்டும் 2 ஆயிரத்தை தொட்ட தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona status In India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,208 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,49,088 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,00,691 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19,398 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K
அடுத்த கட்டுரையில்
கோவை கார் வெடிப்பு; ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தொடர்பா? – பரபரப்பு தகவல்!