1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Congress MLA prison captured in Bangalore

சசிகலா ஸ்டைலில் சோனியா: அடுத்த கூவத்தூராய் மாறிய பெங்களூர்; எம்எல்ஏ-கள் சிறைபிடிப்பு!!

சசிகலா
காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ-களை இரவோடு இரவாக  பெங்களூருக்கு அழைத்து, அங்கு அவர் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.




 
 
குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். இதனால், காங்கிரசின் பலம் குறைந்துள்ளது. 
 
குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பாக அமித்ஷா மற்றும் ஸ்மிருதி ராணி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். 
 
காங்கிரஸ் வெற்றி பெற 44 எம்எல்ஏ-களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே சில எம்எல்ஏ-கள் பாஜக பக்கம் சாய்ந்ததால், மீதி இருக்கும் எம்எல்ஏ-களை இரவோடு இரவாக சிறைபிடித்து வைத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
 
இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சசிகலா தனது பலத்தை காட்ட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை பிடித்ததை நினைவு படுத்துகிறது.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜியோவுக்கு போட்டியாக போன் தயாரிப்பில் இறங்கும் ஏர்டெல்!!