வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (13:47 IST)

ஜியோவுக்கு போட்டியாக போன் தயாரிப்பில் இறங்கும் ஏர்டெல்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் ஒரு 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை கொண்டுவரவுள்ளது. 


 
 
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு விலையில்லா போன் வழங்கவுள்ளது. இது மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
 
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம், மார்ச் 2018 ஆம் ஆண்டில் 4ஜி வோல்ட் சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜியோதான் தற்போது நாட்டில் ஒரே வோல்ட் நெட்வொர்க் ஆகும்.
 
இது குறித்து, ஏர்டெல் எம்டி மற்றும் தலைமை நிர்வாக கூறியதாவது, நாட்டின் மிகப்பெரிய ஆபரேட்டர் போன் உற்பத்தியில் ஏர்டெல் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் சரக்குகளை பராமரித்தலில் ஆர்வம் கொண்டுள்ளது. 
 
4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதறகு பதிலாக, 4ஜி அம்ச தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்து, சாதனங்களுக்கான தொகுக்கப்பட்ட திட்டங்களை வழங்க திட்டம் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
ஜியோ பீச்சர் போன்களில் பெரும்பாலானவை இரட்டை சிம். அதில் ஒரு சிம் ஸ்லாட்டை ஏர்டெல தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.