புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (08:52 IST)

காங்கிரஸ் நடத்திய கருத்துக்கணிப்பு – வெற்றியா ? தோல்வியா ?

நேற்று மக்களவைத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் தனியாக கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு அதை நேற்றைய வாக்குப்பதிவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. நேற்றுவரைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததை அடுத்து கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்தது. நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸுக்கு எதிராகவும் பாஜகவுக்கும் ஆதரவாகவுமே உள்ளன. ஆனாலும் காங்கிரஸ் வட்டாரத்தில் மகிழ்ச்சியாகவே உள்ளனர். அதற்குக் காரணம் அவர்கள் தனியார் ஏஜென்ஸி ஒன்றின் மூலம் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் காங்கிரஸுக்கு கண்டிப்பாக தனிப்பெரும்பாண்மை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அந்த உற்சாகத்தில் தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் அன்றே எதிர்க்கட்சிகளுடனானக் கூட்டத்தை நடத்தும் ஆயத்தத்தில் காங்கிரஸ் உள்ளதாக செய்திகள் உள்ளன.