1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (19:02 IST)

தமிழகத்தில் வெல்லப்போவது யார்? எக்சிட்போல் முடிவுகள்

இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக எக்சிட்போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என எக்சிட்போல் தெரிவித்துள்ளது.
 
அதாவது திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகள் வரையும் பெற வாய்ப்பு இருப்பதாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் நியூஸ்18 எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 12-14 தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பா.ஜ.க 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தே.மு.தி.க 1-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.
 
ஆனால் டைம்ஸ் நவ் எக்சிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகள் குறித்த கருத்துக்கணிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது