மீண்டும் பாஜக ஆட்சி: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் முடிவுகள்

Last Modified ஞாயிறு, 19 மே 2019 (18:44 IST)
இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்ட நிலையில் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் முதல் எக்சிட்போல் கருத்துக்கணிப்பாக டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முழுவிபரங்கள் இதோ:
பாஜக அணி- 306

காங்கிரஸ் அணி- 132

இதர கட்சிகள் 132

வாக்கு சதவீதம்:

பாஜக அணி 41.1%

காங்கிரஸ் அணி 31.7%
இதர கட்சிகள்- 27.2%

ஆனால் இதுவரை வெளிவந்த பெரும்பாலான எக்சிட்போல் கருத்துக்கணிப்பு தவறாகவே இருந்துள்ளது என்பதால் இந்த கருத்துக்கணிப்பு எந்த அளவுக்கு உண்மை என்பதை வரும் 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் மற்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்பையும் உடனுக்குடன் பார்ப்போம்.இதில் மேலும் படிக்கவும் :