திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:52 IST)

குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்- இணைய சேவை இலவசம் - முதல்வர் அறிவிப்பு

ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 ராஜஸ்தான் மா நிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  அங்கு அடுத்திய ஆண்டு இறுதியில்  சட்டமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

இந்த  நிலையில்,  முதல்வர அசோக் ககெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு  ஸ்மார்ட் போன் களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம்  என  அறிவித்துள்ளது. ரூ.12000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு  ஏலம் புதன் கிழமை முதல் நடந்து வருகிறது.

இதனால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.