வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (11:36 IST)

ராகுலும் இல்லை பிரியங்காவும் இல்லை… அடுத்த காங். தலைவர் யார்?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை.

இந்த சூழல்நிலையில், செப்.20 ஆம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்டுடன் சந்திப்பு நடத்தினார். அதில் அவரை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியதாக தெரிகிறது.