1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:46 IST)

மோர்பி சம்பவம் விபத்து அல்ல, கொலை: ஆம் ஆத்மி விமர்சனம்

morbi
குஜராத் மாநிலம் மோர்பி என்ற பகுதியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ரஷ்ய அதிபர் புதின் உள்பட உலக தலைவர்கள் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தற்போது தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் குஜராத் சம்பவம் விபத்து அல்ல அது ஒரு கொலை எனவும், அந்த கொலையை செய்தது பாஜக என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியபோது பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைதான் மோர்பி பாலம் சம்பவம் என்றும் இது விபத்து அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva