வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (10:05 IST)

தலை துண்டித்து கொலை: கொடூரம் என அசோக் கெலாட் கண்டனம்!

உதய்பூரில் டெய்லர் தலை துண்டித்து கொல்லப்பட்டது கொடூரமான செயல் என அசோக் கெலாட் கண்டனம். 

 
ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த டெய்லர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 
 
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,  உதய்பூரில் டெய்லர் தலை துண்டித்து கொல்லப்பட்டது கொடூரமான செயல். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மேலும், இன்று நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும் அமித் ஷாவும் ஏன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை? பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்றி, இதுபோன்ற வன்முறைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.