1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. commercial cylinder rate increased from today

இன்று முதல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்ற நிலையில் இன்று முதல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாகவும் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான 19.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 7 ரூபாய் 50 காசு உயர்ந்து 1817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரூபாய் 818.50 என்ற விலையில்  விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதை அடுத்து விலைவாசி உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.. என்.ஐ.ஏ அதிரடி..!