1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (07:51 IST)

சென்னையில் சிலிண்டர் விலை குறைவு.. ஆனால் இல்லத்தரசிகள் அதிருப்தி..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அந்த வகையில் இன்று சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1930-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்  தற்போது 19 ரூபாய் குறைந்து ரூ.1911 என்று சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் 14 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் ரூ.818.50 என விற்பனையாகி வந்த நிலையில் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்காக சிலிண்டர் விலையை குறைக்காததால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva