1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. commercial cylinder rate decreased from today

சிலிண்டர் விலை குறைந்ததாக அறிவிப்பு.. வழக்கம்போல் இல்லத்தரசிகள் அதிருப்தி..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் எண்ணெய் நிறுவனங்கள் இது குறித்து அறிவிப்பை வெளியிடும் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் இன்று ஜூலை முதல் தேதி என்ற நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளதாகவும் இதனையடுத்து சென்னையில் 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1840.50 என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை சென்னையில் ரூபாய் 818.50 என்ற விலையில் தொடர்ந்து விற்பனையாகும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை