இளநிலை மருத்துவப் படிப்பு: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.பிஎஸ், பல் மருத்துவம், பிஎஸ்ம் எஸ்எஸ், பியுஎம்எஸ், எஸ்.எமெஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்காக நுழைவுத் தேர்வு வரு மே மாதம் 7 ஆம் தேதி 2 மணி முதல் 5 வரை நடைபெறவுள்ளது.
எனவே இந்த நீட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்ககலாம் என்று தேசிய தேர்வு முகமை கூறியிருந்தது.
ஆனால், மேற்குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யமுடியாத நிலையில், கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரினர்.
அதன்படி, ஏப்ரல் 15 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. எனவே இன்று இரவு 11.59 மணிக்குள் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பில்லாம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.