வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (18:31 IST)

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்!

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே,  ஜீன் ஆகிய  மாதங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டும்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் விசைப்படகுகள், மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம்  இன்று முதல் வரும் ஜூன் 14 ஆம் தேதிவரை மலைல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.