1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chattisgarh accident In highway

டிராக்டர் மீது லாரி மோதி 5 பேர் பலி! – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்!

Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் வேறு ஊருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு டிராக்டரில் திரும்பி வந்துள்ளனர். டிராக்டர் ஜோபா கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
குண்டுமழை பொழியும் ரஷ்யா; உக்ரைனுக்குள் உலக தலைவர்கள்!