செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (10:02 IST)

ஏவுகணை தாக்குதல் - இந்தியாவுக்கு இம்ரான் வார்னிங்!

இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்து தாக்கிய போது நாங்கள் நினைத்தால் வேறு ஏதாவது கூட செய்து இருக்க முடியும் என இம்ரான் கான் பேட்டி. 

 
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் அவ்வபோது எல்லையில் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பான பிரச்சினைகளும் எழுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
 
இந்தியா இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியிருந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளித்தது. அதில்,  பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது என விளக்கம் அளித்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபிசாபாத் பேரணியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானுக்கு பல முனைகளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது இந்தியாவின் ஏவுகணையும் வந்துள்ளது. அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மிக சிறப்பாக எதிர்வினையாற்றியது. நாங்கள் நினைத்தால் வேறு ஏதாவது கூட செய்து இருக்க முடியும். ஆனால், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தோம் என தெரிவித்தார். 
 
பொதுவாக ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் அப்படி செய்யாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.