புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

செங்கல்பட்டு அருகே 4 கிமீக்கு வரிசையாய் காத்திருக்கும் வாகனங்கள்: என்ன காரணம்?

செங்கல்பட்டு அருகே 4 கிமீக்கு வரிசையாய் காத்திருக்கும் வாகனங்கள்: என்ன காரணம்?
செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தின் காரணமாக 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் காத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் பள்ளி என்ற பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அந்தப் பேருந்துக்கு பின்னால் வந்த வாகனம் திடீரென மோதியது
 
இதன் காரணமாக பின்னால் வந்த மூன்று வாகனங்கள் மோதியதால் அந்த பகுதியில் சாலையின் பாதை அடைக்கப்பட்டது.
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போக்குவரத்தை சரி செய்தனர் 
 
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நடைபெற்றதாகவும் இரு பக்கமும் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன