1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:36 IST)

குளியலறையில் கேமரா.. விடுதி மாணவி பரப்பிய வீடியோ! – மாணவிகள் தற்கொலை முயற்சி?

Chandigarh University
சண்டிகர் பல்கலைகழகத்தில் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவிகள் குளிப்பதை மாணவி ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.


அந்த வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் கசிய விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல மாணவிகள் பல்கலைகழக விடுதியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தொடர் அதிர்ச்சி சம்பவங்களை தொடர்ந்து பல்கலைகழகம் முன்னர் குவிந்த மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கேமரா வைத்த மாணவி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.