வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (15:23 IST)

திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

கோபிச்செட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிச்செட்டிபாளையம் அருகே பொலவக்ககாளிபாளையம் தோட்டக் காட்டூரில் வசித்து வருபவர்  திருவேங்கடசாமி.இவரது மனைவி மரகதமணி. இந்த தம்பதியின் மகள் இந்து.

இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி  நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவருக்கும்  நல்லககண்டன் பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.

தம்பதியர் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில்,    தன் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, தோட்டக்காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது,  வீட்டில், தன் முகதிதில் பிளாஸ்டிக் கவரை மாட்டி,  ஹீலியம் வாயுவைச் செலுத்தித் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.