ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated: வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:18 IST)

காதலனுடன் ஜாலி ரைடு.! மனைவியை நடுரோட்டில் அடித்த கணவன்! – வைரலாகும் வீடியோ!

Viral Video
உத்தர பிரதேசத்தில் காதலனோடு ஊர் சுற்றிய மனைவியை கணவன் நடுரோட்டில் பிடித்து அடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் அந்த பெண் அப்பகுதியை சேர்ந்த வேறு ஒரு தொழிலதிபர் ஆணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதுதொடர்பாக அடிக்கடி கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் அப்படியாக நடந்த ஒரு சண்டையில் அந்த பெண் கணவனிடம் கோபித்துக் கொண்டு அவர் இல்லாத சமயம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


வீட்டை விட்டு சென்ற மனைவியை தனது மகளுடன் சேர்ந்து கணவன் தேடிக் கொண்டிருந்த நிலையில் ஆக்ரா சாலையில் காதலனோடு மனைவி ஜாலியாக டூவீலரில் செல்வதை அந்த கணவன் பார்த்துள்ளார். உடனடியாக சேஸ் செய்து சென்ற அவர் அவர்கள் இருவரையும் நடுரோட்டிலேயே நிறுத்தி அடித்து உதைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் மற்றும் காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.