செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (07:27 IST)

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: விமான நிலையத்தில் பரிசோதனை கட்டாயம்!

உலகின் பல நாடுகளிலும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொடூர வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் தற்போது பரவி வருகிறது இந்த நிலையில் மைக்ரா வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது
 
இதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விமான நிலையங்களிலேயே பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது