1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (10:18 IST)

அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்! – தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!

தென் ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் புதிய கொரோனா வேரியண்டான ஒமிக்ரான் வைரஸ் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறுவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, பிரேசில் , சீனா, நியூசிலாந்து , இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் தடுப்பூசி செலுத்திருந்தாலும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தாலும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, வங்கதேசம், போட்சுவானா, மொரிசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருந்தால் அவர்களுக்கு பிசிஆர் சோதனை தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.