1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (15:55 IST)

மிரட்டும் ஒமிக்ரான் வைரஸ்; எல்லைகளை மூட இஸ்ரேல் முடிவு!

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் இஸ்ரேல் தனது எல்லைகளை மூட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மொத்தமாகவே வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கு தடை விதித்து எல்லையை மூடுவது குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ள நிலையில் 14 நாட்களுக்கு எல்லையை மூடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் இல்லை என்பதால் உலக நாடுகள் கடும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட தொடங்கியுள்ளன.