1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt extend International Flight Cancellation

சர்வதேச விமானங்களுக்கு மேலும் தடை! – மத்திய அரசு அறிவிப்பு!

Central Govt
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக சர்வதேச விமான சேவைகளுக்கு தடை தொடரும் நிலையில், சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகளுக்கு ஜனவரி 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சர்வதேச விமான தடையை அடுத்த மாதம் பிப்ரவரி 28 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? ஆவேசமான ராஜபக்சே!