புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (10:16 IST)

உபியில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு கொடுத்த மம்தா பானர்ஜி!

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட தேசிய தலைவர்களும் உள்ளூர் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பாஜகவுக்கு எதிரான முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி ஜனதா கட்சிக்க்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.