புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (08:23 IST)

நடிகையை கொலை செய்த கணவர்: சாக்குமூட்டையில் பிணம் கண்டுபிடிப்பு!

நடிகையை கொலை செய்த கணவர்: சாக்குமூட்டையில் பிணம் கண்டுபிடிப்பு!
பிரபல நடிகை ஒருவரை அவரது கணவரே கொலை செய்துவிட்டு சாக்குமூட்டையில் போட்டு பிணத்தை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
வங்காளதேச நாட்டைச் சேர்ந்த நடிகை ரைமா சிமு. 45 வயதான இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வங்கதேச காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்
 
இந்த நிலையில் டாக்கா அருகே சாக்கு மூட்டையில் ஒரு பிணம் இருப்பதை அறிந்த போலீசார் கைப்பற்றி விசாரணை செய்தபோது காணாமல் போன நடிகை ரைமா என்பது தெரிய வந்தது மேலும் இதுகுறித்த விசாரணையில் நடிகை ரைமாவை அவரது கணவரே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்