புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (13:12 IST)

ஆவினின் ஐந்து புதிய தயாரிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்!

ஆவினின் ஐந்து புதிய தயாரிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்!
ஆவினின் ஐந்து புதிய தயாரிப்புகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். 
 
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஆவின் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதும் புதுப்புது பொருட்கள் தயாரிப்பதில் முயற்சி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் ஆவினில் ஐந்து புதிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அந்த பொருட்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார் 
 
ஆவின் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட பிரிமியம் மில்க் ஷேக், யோகர்ட் பானம் அதாவது மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் சுவையில் உள்ள பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து பொருட்களையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொருள்கள் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது