1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Government starts conversation with protesting farmers

மத்திய அரசு - விவசாயிகள்: துவங்கியது 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

Farmers Protest Delhi
டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  
 
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றேனும் இதற்கு சுமுக தீர்வு கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் போராட்டத்தை இன்னும் தீவிரப்பட்டுத்த இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ராமர் கோயில் அறக்கட்டளை நிதியில் மோசடி – ராம்விலாஸ் வேதாந்தி புகார்!