10 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: சமரத்தை நோக்கி மத்திய அரசு?

Sugapriya Prakash| Last Modified சனி, 5 டிசம்பர் 2020 (09:08 IST)
மத்திய அரசு இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. 
 
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர். 
 
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் மத்திய அரசு இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றேனும் இதற்கு சுமுக தீர்வு கிடைக்குமா அல்ல போராட்டம் தொடருமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். 


இதில் மேலும் படிக்கவும் :