திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (16:32 IST)

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகள் தேர்வுகள் முடிவுகள் தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து தேர்வு தாள்கள் திருத்தப்பட்டும் முடிந்த நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வந்தது 
 
இதனையடுத்து விரைவில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்சி தரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்த தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சியின் இந்த அறிவிப்பை அடுத்து சிபிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் பரபரப்பில் உள்ளனர். வரும் 11 மற்றும் 13 ஆம் தேதி வெளியாகும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது