ஃபேஸ்புக்குடன் இணைகிறது சி.பி.எஸ்.இ: ஆன்லைனில் பாடம் நடத்த திட்டம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக பள்ளி கல்லூரிகளின் பல தேர்வுகள் ரத்து செய்தது மட்டுமின்றி இந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு வீணாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ நிறுவனம் வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது
இதுகுறித்து வெளியான தகவலின்படி வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி முதல் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் ஜூலை 6 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
பேஸ்புக் மூலம் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை சிபிஎஸ்இ எடுத்து உள்ளதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்