1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2026 (13:30 IST)

மோடியின் வெளிநாட்டு பயணங்கள்!.. 5 வருடங்களில் 562 கோடி செலவு!..

மோடியின் வெளிநாட்டு பயணங்கள்!.. 5 வருடங்களில் 562 கோடி செலவு!..
கடந்த 3 முறையும் மத்தியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால் நரேந்திர மோடி பிரதமராக நீடித்து வருகிறார். பாஜக அரசின் மீது பல விமர்சனங்களும் இருக்கிறது. சிறுபான்மையினர் மீது தாக்குதல், மத அரசியல் என பல விமர்சனங்கள் அந்த கட்சியின் மீது இருக்கிறது. அதே நேரம் வட இந்தியாவை சேர்ந்த மக்கள் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து வாக்களிப்பதால் அந்த கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது..

ஒருபக்கம் பிரதமர் மோடி பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார். இந்நிலையில் 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட 43 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 462.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவிற்கு நான்கு முறை பயணம் செய்ததற்கு மட்டுமே 74.4 கோடி செலவானதாக சொல்லப்பட்டிருக்கிறது.. அதிகபட்சமாக 2025 பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு மோடி மேற்கொண்ட பயணத்திற்கு மட்டும் 25.5 கோடி செலவானதாக கூறப்பட்டிருக்கிறது..