வியாழன், 16 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 பிப்ரவரி 2026 (14:46 IST)

அமெரிக்க ஏஐ நிறுவனத்தின் ஒரே ஒரு அறிவிப்பு.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விழுந்த பேரிடி!

அமெரிக்க ஏஐ நிறுவனத்தின் ஒரே ஒரு அறிவிப்பு.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விழுந்த பேரிடி!
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்று ஒரு கருப்பு தினமாக அமைந்துள்ளது. இன்று, பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் சுமார் 5% வரை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிரடி வீழ்ச்சிக்கு 'ஆந்த்ரோபிக்' என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய 'கிளாட் கோஒர்க்' என்ற கருவியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
 
இன்று ஒரே நாளில் நிஃப்டி ஐடி குறியீடு 4% க்கும் மேல் சரிந்து, சுமார் ரூ.1.3 லட்சம் கோடி சந்தை மதிப்பு ஆவியானது.
 
டிசிஎஸ் பங்குகள் 4.5% சரிந்து, அதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு கீழே சென்றது. இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் பங்குகளும் 4-5% வரை சரிந்தன.
 
சட்டப் பணிகள், விற்பனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளை இந்த ஏஐ கருவி தானாகவே செய்யும் என்பதால், இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
 
இந்த சூழலை 'SaaSpocalypse' என்று வல்லுநர்கள் வர்ணிக்கின்றனர். அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த நிச்சயமற்ற நிலையும் இந்த வீழ்ச்சிக்கு கூடுதல் காரணங்களாக அமைந்தன.
 
Edited by Siva