தொடர்புடைய செய்திகள்
- JEE நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்.. இன்று ஹால்டிக்கெட்! – மத்திய அரசு அறிவிப்பு!
- குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
- +2 தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பம்! – முக்கிய அறிவிப்பு!
- பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
- அண்ணா பல்கலைக செமஸ்டர் தேர்வு முடிவுகள் 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!
வெளியானது சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்! - மாணவர்கள் மகிழ்ச்சி!
நீண்ட காலமாக சிபிஎஸ்சி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்து வந்தது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரி அட்மிசன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் கல்லூரி அட்மிசன் தேதி நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் 92.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
