அண்ணா பல்கலைக செமஸ்டர் தேர்வு முடிவுகள் 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகளில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது
இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் 62 சதவீத மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது