1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Captain varun singh still in critical condition

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் வருண் சிங்கின் உடல்நிலை!

நீலகிரி விபத்து
விமான விபத்தில் படுகாயங்களுடன் காப்பாற்ற வருண் சிங் இப்போது பெங்களூருவில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியது. கேப்டன் வருண் சிங்கின் சிகிச்சைக்காக பெங்களூரு விமானப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை இன்னமும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும்! – காங்கிரஸிலிருந்து வந்த பரிந்துரை!