ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (10:54 IST)

கொரோனா விதிமுறைகளை மீறி கிளப்பில் ஆட்டம் போட்ட பிரதமர்… மன்னிப்பு கோரல்!

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பின்லாந்து நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த பட்டியலில் பின்லாந்து பிரதமர் சன்னா மரினும் இருந்தார்.

ஆனால் அவர் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் நடன கிளப் ஒன்றில் விடிய விடிய நடனமாடி கேளிக்கை செய்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி குறுஞ்செய்தி தன்னுடைய அலுவலக தொலைபேசிக்கு அனுப்பப்பட்டதாகவும், அது வீட்டில் இருந்ததால் தன்னால் அந்த குறுஞ்செய்தியைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.